டாப் கியரில் விஜய், கடுமையாக போராடவேண்டிய கட்டாயத்தில் அஜித்

தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களின் படங்கள் ஓபனிங் படு பிரமாண்டமாக இருந்தாலும் அடுத்தடுத்து பாக்ஸ் ஆபிஸை நிரப்ப்புவது அந்த படத்தின் கதை களமும், பார்வையாளர்களின் பாசிடிவ் ரியாக்ஸனும் தான்.

அந்த வகையில் ரசிகர்களின் ரசனைக்கேற்றவாறு கதைகளத்தை தேர்வு செய்து, பாக்ஸ் ஆபீஸில் யார் கிங் என்பதை மொத்த வசூல் விவரமானது காட்டி கொடுத்து விடுகிறது. அந்த பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் பின்வருமாறு,

என்றும் முதலிடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். காபாலி படம் மூலம் மட்டுமே 290 கோடி வசூல் வேட்டை நிகழ்த்தி உள்ளார். இதனை முறியடிக்க அடுத்து 2.O காத்து கொண்டு இருக்கிறது.

அடுத்து இடத்துக்கு தல தளபதிக்கு இடையில் நடந்த கடும் போட்டியில் மெர்சல் படம் மூலம் சூப்பர் ஸ்டார்க்கு அடுத்து தான் என்பதை பலமாக பதிவு செய்துள்ளார். மெர்சல் வசூல் சுமார் 250 கோடி.

அதனை தொடர்ந்து ஷங்கர்-சியான் விக்ரமின் பிரமாண்ட கூட்டணியான ஐ தான். மொத்த வசூல் 230 கோடி.

இவருக்கு அடுத்து இப்போ யார் இருப்பா! நம்ம தலதான் விவேகத்தில் சற்று சறுக்கினாலும் வசூலில் 128 கோடி பெற்று தனது கெத்தை காப்பாற்றி கொண்டார். அடுத்து தனது விசுவாசத்தை ரசிகர்களுக்கு காட்ட கடுமையாக உழைத்து வருகிறார்.

இதனை தொடர்ந்து சூர்யா நடிப்பில் சிங்கம் 2வானது, 120 கோடியாகவும், ரெமோ படம் மூலம் சிவகர்த்திகேயன் 90 கோடி வசூலையும், வேலையில்லா பட்டதாரி மூலம் தனுஷ் 75 கோடி வசூலும், தனி ஒருவன் மூலம் ஜெயம் ரவி 60 கோடி வசூலும், விக்ரம் வேதா மூலம் விஜய் சேதுபதி 55 கோடியும் பெற்று அதனை முறியடிக்க கடுமையாக உழைத்தும் வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment