குத்துசண்டை சாம்பியன்ஷிப்: இந்தியாவிற்கு வெள்ளி பதக்கம்..!

உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்போட்டி  ரஷியாவில் நடைபெற்று வருகிறத.இதில் 48 கிலோ எடைப்பிரிவில்  நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை மஞ்சு ராணி, தாய்லாந்து வீராங்கனை சுதாமத் உடன் மோதினார். இதில் மஞ்சு ராணி 4 – 1 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் மஞ்சு ராணி, ரஷ்யா வீராங்கனை  எகடெரினா உடன் மோதினார். இதில் மஞ்சு ராணி  4-1 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளி பதக்கத்தை கைப்பற்றினார்.

author avatar
murugan