Breaking:அதிபர் பதவியேற்பின்போது அடுத்தடுத்து குண்டுவெடிப்பு..!

ஆப்கானிஸ்தானில் உள்ள காபூலில் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கனி பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்த பதவியேற்பு விழாவில் அதிபர் அஷ்ரஃப் கனி பதவியேற்றுக்கொண்டு இருக்கும்போது திடீரென அடுத்தடுத்து வெடி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

ஆப்கானிஸ்தான் அதிபர் பதவிக்கு கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தற்போது அதிபராக இருந்த அஷ்ரப் கானி போட்டியிட்டார். இவரை எதிர்த்து முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி அப்துல்லா போட்டியிட்டார். கடந்த டிசம்பர் மாதம் 22ம் தேதி எண்ணப்பட்டு இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் அதிபர் அஷ்ரப் கனி 923868 (50.64%) வாக்குகளை பெற்று 2வது முறையாக அதிபரானார்.

இந்நிலையில் இன்று பதவி ஏற்பு விழா காபூலில் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி ஆப்கானிஸ்தான் அதிபராக அஷ்ரப் கனி பதவி ஏற்கும் விழா நடைபெற்றது. அதிபராக அஷ்ரஃப் கனி பதவிப்பிரமாணம் ஏற்கத் துவங்கும் போது அருகில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதனால் மக்கள் அலறி அடித்து ஓடினர். இதன் காரணமாக அங்கு பரபரப்பு நிலவியது. ஆனால் அதிபருக்கு எதுவும் நிகழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan