விமான நிலையத்தில் வெடிகுண்டு பையால் பரபரப்பு.!

Bomb bombing at airport

  • கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் கேட்பாரற்ற நிலையில் கருப்பு பை ஒன்று கிடந்து உள்ளது.
  • பையை சோதனை செய்ததில் வெடிகுண்டு இருந்தது தெரிய வந்தது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் கேட்பாரற்ற நிலையில் கருப்பு பை ஒன்று கிடந்து உள்ளது.இதுகுறித்து, பாதுகாப்பு பணியில் இருந்த  பாதுகாப்பு படையினர் மங்களூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள் பையை சோதனை செய்ததில் வெடிகுண்டு இருந்தது தெரிய வந்தது. அந்த பையை மீட்டு வெடிகுண்டு மீட்பு வாகனத்தில் வைத்து பாதுகாப்பான இடத்தில் வைத்து உள்ளனர். மேலும் அந்த பை தொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மாநிலத்தில் உள்ள மற்ற விமான நிலையங்களும் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.அடுத்த சில நாள்களில் குடியரசு தினம் வருவதை ஒட்டி பயங்கரவாதிகள் அதை சீர்குலைக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு இருக்கலாம் என போலீசார் தரப்பில் கூறப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

  • Mangalore International Airport, Karnataka State Airport
  • Checking the bag revealed that there was a bomb.
A black bag was found at Mangalore International Airport in Karnataka. The bomb exploded after the bomb experts rushed to the scene. The bag was retrieved and placed in a bomb-proof vehicle. CCTV footage of the bag is being investigated. Other airports in the state have also been put on guard.