நடிகை அமலாபால் நடித்த ஆடை படத்தின் ட்ரைலரை வெளியிடும் பாலிவுட் இயக்குனர்!

நடிகை அமலாபால் நடித்த ஆடை படத்தின் ட்ரைலரை வெளியிடும் பாலிவுட் இயக்குனர்!

நடிகை அமலாபால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர், இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில், ஆடை படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து, இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. நடிகை அமலாபால் இந்த படத்தில் ஆடை இல்லாமல் நடித்திருப்பதால் தணிக்கை குழுவினர் இப்படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் ட்ரைலரை பிரபல பாலிவுட் இயக்குனரான அனுராக் கஷ்யப் வெளியிட உள்ளாராம். இவர் நயன்தாரா நடித்த இமைக்க நொடிகள் படத்தில் வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube