தல அஜித்திற்கு ஜோடியாக களமிறங்கும் பிரபல பாலிவுட் நடிகை!

  • தல அஜித்திற்கு ஜோடியாக களமிறங்கும் பிரபல பாலிவுட் நடிகை.
  • பாலிவுட்

By Fahad | Published: Apr 01 2020 04:08 AM

  • தல அஜித்திற்கு ஜோடியாக களமிறங்கும் பிரபல பாலிவுட் நடிகை.
  • பாலிவுட் நடிகை ஹூமா குரோஷி வலிமை படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இந்த திரைப்படத்தை தொடர்ந்து, தற்போது இவர் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக யார் நடிக்க போவது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. இந்நிலையில், விசுவாசம் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்தது போல, இந்த படத்திலும் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாராவே நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. மேலும் பல நடிகர்களின் பெயரும் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது ரஜினியின் காலா படத்தில் நடித்த பாலிவுட் நடிகை ஹூமா குரோஷி வலிமை படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.