எகிப்தில் சுற்றுலா பயணிகளை கவர புதிய முயற்சி! வரவேற்பு கிடைக்குமா?

எகிப்தில் சுற்றுலா பயணிகளை கவர புதிய முயற்சி.

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸானது, தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால், ஒவ்வொரு நாட்டு அரசும், பொதுமுடக்கத்தை அமல்படுத்தியது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்புக்குள்ளானது.

இந்நிலையில், தற்போது பல நாடுகளில் ஊரடங்கில் தாளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிற நிலையில், எகிப்து நாத்தில், கொரோனா பொது முடக்கத்தால், முடங்கி கிடைக்கும் சுற்றுலா பயணிகளை கஸாரும் வண்ணம், 301 மில்லியன் எகிப்தியன் பவுண்ட் முதலீட்டில், ரெஸ்டாரண்ட், எலெக்ட்ரிக் பஸ் உள்ளிட்ட பல புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், உணவருந்திய வண்ணம் எகிப்திய பிரமிடை கண்டுகளிக்கும் வண்ணம் இந்த ரெஸ்டாரண்ட் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த முயற்சிக்கு சுற்றுலா பயணிகள் மத்தியில், நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.