ஆற்றுப்பகுதியில் தலை, கை, கால்கள் துண்டிக்கப்பட்ட சடலம்.! அதிர்ச்சியடைந்த காவல்துறை.! நடந்தது என்ன.?

  • தேனீ மாவட்டத்தில் ஆற்றுப்பகுதியில் உடலில் உள்ள பாகங்களை துண்டித்து

By Fahad | Published: Apr 04 2020 11:57 PM

  • தேனீ மாவட்டத்தில் ஆற்றுப்பகுதியில் உடலில் உள்ள பாகங்களை துண்டித்து கொலை செய்து சடலம் கிடந்ததை பார்த்த காவல்துறை அதிர்ச்சியடைந்தனர். பின்னர் விசாரணை மூலம் கொலையாளிகளை பிடித்தனர்.
தேனீ மாவட்டம் கம்பம் தொட்டமாந்துறை ஆற்றுப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு தலை, கை, கால்கள் துண்டிக்கப்பட்ட அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கிடப்பதாக போலீசுக்கு தகவல் வந்துள்ளது. பின்னர் தகவலறிந்த கம்பம் போலீசார் சம்பா இடத்துக்கு வந்து சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா மூலம் கொலை செய்தவரின் வாகனத்தின் எண்ணை வைத்து கொலையாளிகளை பிடித்தனர். இதையடுத்து விசாரணையின் போது கம்பம் மருவரசி மஹால் 15வைத்து வார்டை சேர்ந்த செல்வி என்பவர் அவரது 2வது மகன் பாரத்துடன் சேர்ந்து, மூத்த மகன் விக்னேஷை வீட்டில் வைத்து கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸ் தீவிர விசாரணை மேற்கொண்டனர், அப்போது வாக்குமூலத்தில் தனது மூத்த மகன் கஞ்சா போன்ற போதை பொருட்களுக்கு அடிமையாகி வந்தான். இதனால் ஆத்திரமடைந்த நாங்கள் கொலை செய்துவிட்டோம் என தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கொலை செய்தவர்களின் கொடுத்த தகவல்படி வெவ்வேறு இடங்களில் வீசப்பட்ட தலை, கை என உடலில் உள்ள பாகங்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.