என்ன கொடுமை சார்.! அமைச்சர் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்ப மறுப்பு..பொதுமக்களுடன் அரசு பேருந்தில் பயணம்.!

காரைக்கால் அமைச்சர் கமலக்கண்ணனின் அமுதசுரபி பெட்ரோல் நிலையத்திற்கு

By balakaliyamoorthy | Published: Jan 04, 2020 02:06 PM

  • காரைக்கால் அமைச்சர் கமலக்கண்ணனின் அமுதசுரபி பெட்ரோல் நிலையத்திற்கு சென்று டீசல் நிரப்ப கேட்டுள்ளனர். அதற்கு அமுதசுரபி ஊழியர்கள் டீசல் நிரப்ப மறுத்துவிட்டார்கள்.
  • புதுச்சேரியில் அமைச்சரவை கூட்டம் இருப்பதால சகா பயணிகளுடன் அரசு பேருந்தில்  தனக்கென டிக்கெட் எடுத்துக்கொண்டு பயணித்த நிகழ்வு அனைவரின் கவனத்தை ஈர்த்தது.
புதுச்சேரி அரசு துறைகள் மூலம் இயக்கப்படும் வாகனங்களுக்கு அரசு சார்பு நிறுவனமான அமுதசுரபி பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் நிரப்ப படுகின்றது. இந்நிலையில் புதுச்சேரி அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் காரைக்காலை சேர்ந்த வேளாண் மற்றும் கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணனின் வாகனம் நேற்று மாலை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அமுதசுரபி பெட்ரோல் நிலையத்திற்கு சென்று டீசல் நிரப்ப கேட்டுள்ளனர். அதற்கு அமுதசுரபி ஊழியர்கள் டீசல் நிரப்ப மறுத்துவிட்டார்கள். இதனிடையே நேற்று மாலை அமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற இருந்தது. இதில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் கமலகண்ணன் காரைக்கால் பேருந்து நிலையத்திற்கு வந்து புதுச்சேரிக்கு செல்லருக்கும் அரசு பேருந்தில் ஏறி அமர்ந்தார். பின்னர் அவருக்கான பயணம் டிக்கெட்டுக்கு பணம் கொடுத்து வாங்கிக்கொண்டு சக பயணிகளுடன் புதுச்சேரிக்கு பயணித்தார். இந்த சம்பவம் காரைக்கால் பேருந்து நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அமுதசுரபி ஊழியரிடம் கேட்டபோது, கடந்த 4 மாதத்தில் அரசுத் துறைகளைச் சேர்ந்த வாகனங்களுக்கு ரூ.2 கோடிக்கு மேல் பாக்கிய உள்ளதால் ஜனவரி 1-ம் தேதி முதல் டீசல் வழங்க முடியாது என கூறிவிட்டதாக தெரிவித்தனர். அவ்வப்போது எரிபொருள் இல்லாத காரணத்தால் அமைச்சரின் வாகனம் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
Step2: Place in ads Display sections

unicc