அதிர்ச்சி சம்பவம் ..! ஐஸ் கிரீம் சாப்பிட்ட 5 பேருக்கு நாக்கில் ரத்தம்..!

ஹைதராபாத்தில் உள்ள ஓவைசி நகரில் வசித்து வருபவர்  பாயஸ் அலிகான். இவர் சாலையில்

By murugan | Published: Mar 04, 2020 07:45 AM

ஹைதராபாத்தில் உள்ள ஓவைசி நகரில் வசித்து வருபவர்  பாயஸ் அலிகான். இவர் சாலையில் தள்ளுவண்டியில் விற்கப்படும் குல்பி ஐஸ் கிரீமை வாங்கி கடந்த 1-ம் தேதி தனது குடும்பத்தினருடன் சாப்பிட்டுள்ளார். ஐஸ்கிரீம் சாப்பிட்ட சில நிமிடங்களில் ஐஸ்கிரீம் சாப்பிட 5 பேருக்கும் நாக்கில் வெடிப்பு ஏற்பட்டு ரத்தம் வந்துள்ளது. இதனால் 5 பேரும் அதிர்ச்சி அடைந்து உடனடியாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். பின்னர் இதுகுறித்து சந்தோஷ் நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோடைகாலம் தொடங்கியுள்ளதால் அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடம் ஐஸ் மற்றும் குளிர்பானத்தில் பயன்படுத்தும் கூடிய பொருள்கள் அனைத்தும் சுகாதாரமான முறையில்  உள்ளதாக என உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Step2: Place in ads Display sections

unicc