பிக்பாசுக்கு அட்வைஸ் கொடுத்த …… திருமாவளவன்,கிருஷ்ணசாமி

கமல், பிக் பாஸ் நடிகர்கள் இந்த இடத்தில் 10 நாள்கள்இருங்கள்! திருமாவளவன் அட்வைஸ்”பிக் பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர் கமல் உள்ளிட்ட குழுவினர் சேரியில் வந்து 10 நாள்கள் இருந்து பார்க்கட்டும். அப்போதுதான் சேரி மக்களின் அன்பு, அரவணைப்பு தெரியும். உங்க விளம்பரத்துக்காக சேரி மக்களை அசிங்கப்படுத்தாதீர்கள்” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வேதனை தெரிவித்துள்ளார்.

விருது வென்ற பிக்பாஸ் குடும்பத்தார் :
தமிழக அரசு அறிவித்துள்ள 2009 முதல் 2014 ஆண்டு வரையிலான சினிமா விருது பட்டியலில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டு, தமிழக அரசு அறிவித்துள்ள 2009 முதல் 2014 ஆண்டு வரையிலான விருதை வென்றுள்ளனர்.
2009ல் வெளியான மலையன் படத்துக்காக, கஞ்சா கருப்பு நகைச்சுவை நடிகர் விருது வாங்கியுள்ளார். 
2012ல் வெளியான பாரசீக மன்னன் படத்துக்காக, ஆர்த்தி நகைச்சுவை நடிகை விருது வாங்கியுள்ளார்.
2014ல் வெளியான நிமிர்ந்து நில் படத்திற்காக, காயத்ரி ரகுராம் சிறந்த நடன ஆசிரியர் விருது வாங்கியுள்ளார்.
களத்தில் குதித்த கி.சாமி :
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ‘சேரி பிஹேவியர்’ எனக் கூறப்பட்ட விவகாரத்தில் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காவிடில் போராட்டம் நடத்தப்படும் என்று, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமிசென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள காயத்ரி ரகுராம், உரையாடல் ஒன்றின்போது, ‘சேரி பிஹேவியர்’ என தெரிவித்தார். இந்த பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
வன்கொடுமை சட்டத்தின்கீழ் காயத்ரி மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது.
இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளரும், முன்னணி நடிகருமான கமல்ஹாசன், காயத்ரி பேசிய வார்த்தைக்காக வருத்தம் தெரிவிக்கவில்லை. மாறாக எரியும் கொள்ளியில் எண்ணையை ஊற்றிவிட்டார்.தெருவில் இதைவிட மோசமாக பேசுகிறார்கள், ஜாதி இன்னும் நாட்டில் உள்ளது, ஜாதி பற்றி யார்தான் பேசவில்லை.., இப்படியெல்லாம் கமல் பேட்டியளித்து மறைமுகமாக காயத்ரி பேச்சுக்கு நியாயம் கற்பித்துவிட்டார்.
இதனிடையே, சென்னையில் நிருபர்களிடம் இன்று கிருஷ்ணசாமி கூறுகையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசுவது, எதேச்சையாக நடந்தது இல்லை. திட்டமிட்டு கதை எழுதி 10 நாட்கள் நடித்துள்ளனர்.
சேரி பிஹேவியர் என்ற பேச்சுக்காக, கமல் மன்னிப்பு கேட்காவிட்டால் புதிய தமிழகம் சார்பில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். நடிகை பாலியல் பலாத்கார வழக்கில் தேசிய மகளிர் ஆணையம், கமலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனிடையே கிருஷ்ணசாமி மூலம் கமலுக்கு நரெுக்கடி அதிகரித்துள்ளது.
author avatar
Castro Murugan

Leave a Comment