மூன்றே நாட்களில் மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிய கேரள இடது முன்னணி முதலமைச்சர்.!

திருவனந்தபுரம் அருகே வழுதக்காடில் உள்ள பார்வை குறைபாடுடைய மாணவர்களுக்கான அரசுப் பள்ளி மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுடன் நவ-2 அன்று கேரள முதலமைச்சர் தோழர் பினராயி விஜயனை அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து சில கோரிக்கைகள் வைத்தனர்.

திறன் மேம்பாட்டு மையம் அமைக்க வேண்டும்,

20 புதிய மடிக்கணினிகள் தரவேண்டும்,

உணவுத் தொகையை உயர்த்த வேண்டும் என்பது கோரிக்கைகளாகும்.

தனது துறை அதிகாரிகளுடன் ஆலோசித்துவிட்டு, நடவடிக்கை எடுப்பதாக  பினராயி அவர்கள் மாணவ செல்வங்களிடம் வாக்குறுதி அளித்தார்.
-பின்பு இனிப்புகள் வழங்கி மாணவர்களை வாழ்த்தினார் முதல்வர் அவர்கள்.

நேற்று நவ-5 பார்வை குறைபாடுடைய குழந்தைகளின் கோரிக்கைகள் முழுமையாக ஏற்கப்பட்டதாக முதலமைச்சர் தோழர் பினராயி அறிவித்ததோடு மட்டுமன்றி

மாலை 4-00 மணியளவில் அவர்களுக்கான
20 புதிய மடிக்கணினிகளையும் கேரள அரசு சார்பில் பள்ளிக்குச் நேரடியாக சென்று குழந்தைகளிடம் வழங்க வகை செய்தார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment