அமெரிக்க அமைச்சருக்கு முளை புற்றுநோய்..,

வாஷிங்டன்: அமெரிக்க குடியரசு கட்சியின் மூத்த தலைவரும், ‘செனட்’ எனப்படும், அந்நாட்டு பார்லிமென்ட் மேல் சபை எம்.பி.,யுமான, ஜான் மெக்கைன், 80, மூளை புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவில், குடியரசு கட்சியின் மூத்த தலைவர், ஜான் மெக்கைன். முன்னாள் கடற்படை அதிகாரியான அவர், வியட்நாம் போரின்போது, அமெரிக்காவிற்காக போரில் பங்கேற்றார். வியட்நாம் அரசால் கைது செய்யப்பட்டு, ஐந்து ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். விடுதலையான பின், அரசியலுக்கு வந்த ஜான் மெக்கைன், செனட் சபை, எம்.பி.,யாக, தொடர்ந்து ஆறு முறை தேர்வு செய்யப்பட்டார்  செனட் சபை எம்.பி.,யாக தற்போது பதவி வகித்த வரும் அவர், ராணுவ விவகார கமிட்டியின் தலைவராக இருந்து வருகிறார். சமீபத்தில், உடல்நலம் பாதிக்கப்பட்ட அவருக்கு, மூளையில் இருந்த கட்டி, அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது; பரிசோதனையில், அது, புற்றுநோய் கட்டி என தெரிய வந்துள்ளது. இதை தொடர்ந்து, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
author avatar
Castro Murugan

Leave a Comment