அரசு பொறியியல் கல்லூரியில், ராகிங் குறித்த சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது…!

பர்கூர்: பர்கூர் அரசு பொறியியல் கல்லூரியில், ராகிங் குறித்த சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. கல்லூரி முதல்வர் திருமால் தலைமை வகித்தார். பர்கூர் இன்ஸ்பெக்டர் பழனிசாமி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், பொறியியல் கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். அவர்களிடம், ராகிங் என்பது சட்டப்படி குற்றம் என்றும், அந்த குற்றத்தை செய்தால், என்னென்ன தண்டணை கிடைக்கும் என்றும் விளக்கப்பட்டது. மேலும், ராகிங்கை தடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. கருத்தரங்கில், மாவட்ட சட்ட பணிகள் குழு தலைவர் அறிவொளி, செயலாளர் தஸ்னீம், வக்கீல் குணசேகர், கணினித்துறை பேராசிரியர் நவீசா பேகம் ஆகியோர் பேசினர்.

author avatar
Castro Murugan

Leave a Comment