பிரதமர் அமெரிக்கா பயணம்..,

இஸ்லாமாபாத்: ”அணு அணுகுண்டு சோதனை நடத்தாமல் இருப்பதற்காக, அப்போதைய அமெரிக்க அதிபர், பில் கிளிண்டன், எங்களுக்கு, 35 ஆயிரம் கோடி ரூபாய் தர முன் வந்தார்,” என, பாகிஸ்தான் பிரதமர், நவாஸ் ஷெரீப், அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கூறி, அந்நாட்டில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில், பாகிஸ்தானின் சியால்கோட்டில், நவாஸ் ஷெரிப் பேசியதாவது: எதிர்க்கட்சிகள் என் மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்றன; வெளிநாடுகளில் பணம் பதுக்கி வைத்திருப்பதாகவும் பிரசாரம் செய்கின்றன; இதில், துளியும் உண்மை இல்லை. வாஜ்பாய், இந்திய பிரதமராக இருந்தபோது, 1998ல், அந்த நாட்டின் பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது; இதற்கு பதிலடியாக அடுத்த சில நாட்களிலேயே பாகிஸ்தானும் அணுகுண்டு சோதனை நடத்தி, தன் பலத்தை உலகிற்கு அறிவித்தது. அப்போது, அணுகுண்டு சோதனை செய்யாமல் இருப்பதற்காக, அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன், எங்களுக்கு, 35 ஆயிரம் கோடி ரூபாய் கொடுக்க முன் வந்தார். அதை நான் செய்தால், என் தாய் நாட்டிற்கு துரோகமிழைத்தவன் ஆகி இருப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

author avatar
Castro Murugan

Leave a Comment