உத்தர பிரதேசத்தில் மீண்டும் குழந்தைகள் உயிரிழப்பு !தொடரும் அலட்சியம் …

                              Image result for uttar pradesh govt hospital
கடந்த ஆகஸ்ட் மாதம் இதே மருத்தவக் கல்லூரியில் மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறையால் 70 குழந்தைகள் இறந்த சோகத்தின் வடு இன்னும் மறையவில்லை. ஆனால் அதற்குள்  
உத்தரபிரதேச மாநிலம் பிஆர்டி அரசு மருத்தவக் கல்லூரியில் மீண்டும் 30 குழந்தைகள் உயிரிழந்துள்ளது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. 
இந்நிலையில் அக்டோபர் 9ம் தேதி அன்று இங்கு சிகிச்சை பெற்ற 16 குழந்தைகள் ஒரே நாளில் இறந்தன. இதனை தொடர்ந்து இங்கு சிகிச்சை பெற்ற 30 குழந்தைகள் இறந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மூளைக்காய்ச்சல் நோயால் குழந்தைகள் இறப்பது தொடர் கதையாகி இருக்கிறது. 

Image result for uttar pradesh govt hospital


உத்தரபிரதேச மாநிலத்தில் 1978 முதல் 2007 ஆம் ஆண்டு வரை மூளைக்காய்ச்சலால் குழந்தைகள் அதிக அளவில்  இறந்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. மாசுப்பட்ட தண்ணீரில் உள்ள வைரசால் நோய்  அதிக அளவில் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் ஈர்ப்பை தடுக்க உத்தர பிரதேச அரசு கவனம் செலுத்தவில்லை என்பது அனைவரின் குற்றசாட்டாக உள்ளது. 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment