டெங்கு’ பரிசோதனைகளை அரசு மருத்துவமனைகளில் உடனே துவக்க நடவடிக்கை எடுத்திடுக! வாலிபர் சங்க மாநிலக்குழு வலியுறுத்தல்

அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் “டெங்கு” காய்ச்சல் பரிசோதனைஆய்வகங்களை உடனடியாக துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன் அரசுப் பள்ளிகளை தனியார் வசம்ஒப்படைக்கும் நிதி ஆயோக்கின் பரிந்துரையை கைவிட வேண்டுமென இராமேஸ்வரத்தில் நடைபெற்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமாநிலக்குழுக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநிலக்கூட்டம் திங்கள், செவ்வாய்ஆகிய தினங்களில் இராமேஸ்வரத்தில் மாநிலத் தலைவர் செந்தில் தலைமையில் நடைபெற்றது.
மாநிலச் செயலாளர் பாலா, பொருளாளர் தீபா மற்றும் மாநில நிர்வாகிகள் ரெஜீஸ்குமார், தாமோதரன், பிந்து, பிரவீண்குமார், மணிகண்டன், ரவிச்சந்திரன், ஜெயக்குமார், பாலச்சந்திரபோஸ், லெனின், இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் ஆதிரெத்தினம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.தீர்மானங்கள் விபரம் வருமாறு;தமிழக மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். அரசுப் பள்ளிகளை தனியார் வசம் ஒப்படைக்கக் கூடாது. அரசுப்பள்ளிகளின் அடிப்படை வசதிகளை தரம் உயர்த்திட வேண்டும். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவரவேண்டுமென வலியுறுத்தி மாவட்டஅளவில் கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்கும் கல்விஉரிமை மாநாடுகளை நடத்த முடிவு செய்யப்பட்டது. மாநிலத்தில் முழுமையாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து பலி எண்ணிக்கை கூடிக் கொண்டே உள்ளது.
தமிழக சுகாதாரத்துறையின் செயலர் போக்கே இதற்கு காரணம். தடுப்பு நடவடிக்கைகளுக்கு பதிலாக மூடிமறைக்கும் வேலைகளை செய்ய முயற்சிக்கக் கூடாது. இதைமாநிலக்குழு வன்மையாக கண்டிக்கிறது. மேலும் டெங்கு பாதிப்புகளை தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசு உடனடியாக மாவட்டந்தோறும் செய்திட வேண்டும். இதை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் கண்டன இயக்கங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது.ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரில் வீரமரணமடைந்த தோழர் சேகுவேரா நினைவு தினமான அக்.9ஆம் தேதியன்று ஏகாதிபத்திய எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்க முடிவு செய்யப்பட்டது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment