பெட்ரோல் ‘பங்க்’ மூடப்படும் அபாயம்

பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களின் அலட்சியத்தால், பெட்ரோல் ‘பங்க்’கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.பொதுத் துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், இந்துஸ்தான் ஆகிய நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றன. தனியார் நிறுவனங்களும், விற்பனையில் ஈடுபடுகின்றன.எண்ணெய் நிறுவனங்கள், மாதத்துக்கு, இரு முறை, பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்தன. ஜூன், 16 முதல், தினசரி விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதனால், பங்க் உரிமையாளர்களுக்கு இழப்பு ஏற்படுவதாகவும், அதனால், ‘பங்க்’கள் மூடப்படும் அபாயத்தில் இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. பாதிப்பு இல்லை இது குறித்து, தமிழ்நாடு, ‘பெட்ரோலியம் டீலர்ஸ்’ கூட்டமைப்பின் தலைவர் முரளி கூறியதாவது:தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 4,850 பெட்ரோல் பங்க்கள் உள்ளன. எண்ணெய் நிறுவனங்கள், 12 ஆயிரம், 20 ஆயிரம், 24 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள லாரிகளில், அவற்றை சப்ளை செய்கின்றன.ஊழியர் சம்பளம், வாடகை உள்ளிட்ட செலவுகளை உள்ளடக்கி, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு, 2.52 ரூபாய்; ஒரு லிட்டர் டீசலுக்கு, 1.60 ரூபாயை, எண்ணெய் நிறுவனங்கள், கமிஷனாக தருகின்றன.மாதத்துக்கு, இரு முறை, பெட்ரோல் விலையில் மாறுதல் செய்யப்பட்டதால், அவற்றை அதிக அளவில் இருப்பு வைக்கும் போது, பெரிய பாதிப்பு இல்லை.தற்போது, தினசரி விலை நிர்ணயம் செய்யப்படுவதால், பெட்ரோல், டீசல் இருப்பு அதிகம் இருந்து, விலை குறையும் போது, அதிக நஷ்டம் ஏற்படுகிறது. நடவடிக்கை அதாவது, டீலர்களுக்கு வாங்கும் விலையை மாற்றாமல், வாடிக்கையாளர்கள் விலையை மட்டும் மாற்றுகின்றனர். இதனால், அதிக விலைக்கு வாங்கிய பெட்ரோலை, குறைந்த விலைக்கு விற்க நேரிடுவதால், அதிக இழப்பு ஏற்படுகிறது.இதை தவிர்க்க, தேவைக்கு ஏற்ப குறைந்தபட்சம், 4,000 லிட்டர் வழங்குமாறு, அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டது.சமீபகாலமாக, பெட்ரோல் ‘பங்க்’கில் விற்பதற்கு பதில், சிலர், லாரிகளில் அவற்றை முறைகேடாக ஏற்றி, சில்லரை விற்பனையில் ஈடுபடுகின்றனர்.

இதை தடுக்க, அரசுநடவடிக்கை எடுக்க வேண்டும்.இதுபோன்ற பிரச்னைகள் தொடர்ந்தால், எண்ணெய் நிறுவனங்களின் பெட்ரோல் ‘பங்க்’கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.அந்த வாய்ப்பை பயன்படுத்தி, தனியார் நிறுவனங்கள், சந்தையை கைப்பற்றி, மக்களை சுரண்டும். அதற்கு, அரசு இடம் தராமல், எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு அவர்கூறினார்.

author avatar
Castro Murugan

Leave a Comment