தினமும் கணினியில் வேலை செய்பவர்களா?

நீங்கள் தினமும் கம்ப்யூட்டரோடு உறவாடுகிறீர்களா? அப்படியெனில் உங்களுக்கு கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம் ஏற்படலாம். இது என்ன பிரச்னை, எப்படி தவிர்க்கலாம்?சென்ற நூற்றாண்டை எலெக்ட்ரிகல் யுகம் என்று சொன்னால் இந்த நூற்றாண்டை எலக்ட்ரானிக்ஸ் யுகம் என்று சொல்லலாம். எலெக்ட்ரானிக்ஸ் துறையில் ஏற்பட்ட புரட்சி நம் நவீன வாழ்வையே அதிரடியாக மாற்றி அமைத்துள்ளது. இன்று கைகளில் செல்போன் இல்லாதவர்களே இல்லை. டி.வி., கணிப்பொறி, லேப்டாப், டேப்லெட் என விதவிதமான எலெக்ட்ரானிக்ஸ் ஒளிர்திரைகளைப் பார்த்துக்கொண்டே இருக்கிறோம். பின்னிரவு இரண்டு மூன்று மணி வரை கொட்ட கொட்ட விழித்தபடி வாட்ஸப் அரட்டையிலும் யூடியூப் வீடியோவிலும் மூழ்கியிருக்கிறோம்.
இரவு தாமதமாக தூங்கி, காலையில் தாமதமாக எழுந்து என இந்த எலெக்ட்ரானிக்ஸ் யுகத்தில் நம் வாழ்க்கைமுறையே தலைகீழாக மாறிப்போய் உள்ளது. கணிப்பொறியில் வேலைசெய்பவர்கள் சராசரியாக ஒரு நாளின் பாதிக்கு மேற்பட்ட நேரத்தை கணிப்பொறி திரையை வெறிப்பதிலேயே செலவழிக்கிறார்கள். இப்படி ஓயாது கண்களுக்கு வேலை கொடுத்துக்கொண்டே இருப்பது நல்லதா என்றால் நல்லது இல்லை என்கிறார்கள் கண் மருத்துவர்கள். ஒரு நாளின் பெரும்பான்மையான நேரம் எலெக்ட்ரானிக் ஒளிர்திரைகளையே நோக்கிக்கொண்டிருப்பதால் கண்கள் பாதிக்கப்பட வாய்ப்புகள் நிறைய உள்ளன. இதை, கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம் (Computer Vision Syndrome – CVS) என்கிறார்கள்.
கண் பாதிப்புக்கு காரணம்:
நம் கண்கள் லட்சக்கணக்கான வருடங்களாக இயற்கையான ஒளியைப் பார்த்துப் பார்த்து பரிணாமம் அடைந்தவை. அது போன்ற ஒளிக்கும் காட்சிகளுக்கும் மட்டுமே இயல்பாக பழக்கப்பட்டவை. பொதுவாக, அதிக ஒளி உமிழும் காட்சிகளைப் பார்க்கும்போது நம் கண்கள் கூசும். மேலும், எந்த ஒரு பொருளைக் கூர்ந்து நோக்கும்போதும் நம் கண்ணின் மணிகள் விரிவடையும். கேமரா லென்ஸ் ஒன்று ஜூம் ஆவதைப் போன்றதுதான் இது. இப்படி ஜூம் ஆகும் கண்கள் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும். டி.வி., கம்ப்யூட்டர் திரைகளைப் பார்க்கும்போது வெகுநேரம் கண்கள் ஜூம் ஆன நிலையிலேயே இருக்க நேர்கிறது. இதனால், கண்ணின் சுருங்கிவிரியும் தன்மை பாதிக்கப்படுகிறது. 

கண்களை பாதுகாப்பான வழிமுறைகள்:

கணிப்பொறியைப் பயன்படுத்தும் அறையில் போதுமான வெளிச்சம் இருக்க வேண்டியது அவசியம்.
கம்ப்யூட்டர் திரையில் கிளார் விழுவதைத் தவிர்க்க வேண்டியது மிகவும்  அவசியம்.
எல்.சி.டி/ எல்.இ.டி மானிட்டர்களைப் பயன்படுத்துவது நல்லது.
author avatar
Castro Murugan

Leave a Comment