பொறியியல் படிப்புக்கு அடுத்த ஆண்டு நுழைவுத்தேர்வு…..!

சென்னை: அடுத்த ஆண்டு இன்ஜினியரிங் படிப்புகளுக்கான சேர்க்கை, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் என உத்தரவாதம் இல்லை என்று தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கூறியுள்ளார். பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்துறை படிப்புகளுக்கான பட்டமளிப்பு விழா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதில் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடுத்த ஆண்டுக்கான இன்ஜினியரிங் படிப்புகளில் நீட் தேர்வு முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறாது என என்னால் உத்தரவாதமளிக்க முடியாது என தெரிவித்தார்.மேலும், மற்ற மாநிலங்கள் நீட் தேர்வை ஏற்றுக் கொள்ளும் போது தமிழகமும் அதனை ஏற்றுக் கொண்டாக வேண்டும் என்றும், ஆனாலும் நீட் தேர்விலிருந்து விலக்கு பெற மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம் என்றும் தெரிவித்தார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னரே மத்திய பிஜேபி அரசு மருத்துவ படிப்பை தொடர்ந்து பொறியியல் படிப்புக்கும் நுழைவுத்தேர்வு கொண்டுவர வேண்டும் என தீர்மானித்துவிட்டது என்று கல்வியாளர்களும் மாணவர் சங்கங்களும் கூறிவந்தனர்.தற்போது அந்த நிலைபாட்டை நோக்கி பிஜேபி அரசும் பயணித்து கொண்டு இருக்கிறது.இனி தமிழக மாணவர்களின் பொறியியல் தட்டி பறிக்க காத்திருகிறது….மத்திய ,மாநில அரசுகள்.

author avatar
Castro Murugan

Leave a Comment