இளநரையை மறைக்க உதவும் தாமரைப் பூ எண்ணெய்!

இளநரையை மறைக்க உதவும் தாமரைப் பூ எண்ணெய்!

மொழிகளில் கலைகளில் நல்ல வளர்ச்சியை அடைய கலைஞர்கள் வணங்கும் கலைமகள் சரசுவதிதேவி வீற்றிருக்கும் பெருமையுடையது, தாமரை மலர்.
அனைத்துவகை பயன்பாட்டாலும், மனிதர்க்கு தெய்வீக மூலிகை மலராகவும் விளங்கி, அவர்கள் இன்னல்கள் களைந்து உடல்நிலை சீராக்கிவருகிறது. சமீபத்தில் பரவலாகிவரும் மலர் மருத்துவத்தில் முக்கியமான இடம், தாமரைக்கு உண்டு.
மலர்கள், இலை, தண்டுகள், வேர்க்கிழங்கு என அனைத்து வகையிலும் நன்மையே அளிக்கவல்லது ஓடாத நீர்நிலைகளான குளங்களில் வாழ்பவை தாமரை மலர்கள்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வைத்தியத்தில் பயன்பட்ட தாமரையின் மடல்கள், பொதுவாக உடலின் வெம்மையைக் குறைத்து குளிர்ச்சியுண்டாக்கும். மருத்துவத்தில் அதிகமாக வெண்தாமரை மலரே பயன்படுத்தப்பட்டாலும், செந்தாமரை மலர்களும் அதே அளவு பலன்கள் தருபவையே.

தாமரை மலர்களின் பலன்கள் :

தாமரை மடல்களை நீரில் இட்டு மூன்றில் ஒரு பங்கு நீராக மாறும்வரை சுடவைத்து, அந்த நீரை தினமும் பருகிவர, உடல் சூடு, உள் உறுப்புகள் சூடு விலகி, உடல் குளிர்ச்சியடையும், தாகம் தணியும்.
அரைத்த தாமரைப்பூவை, பாலில் இட்டு, கருவுற்ற தாய்மார்கள் தினமும் பருகிவர, உண்ட உணவுகள் செரிமானமாகி, உடனே பசி எடுக்கும்.
தாமரை மடல்களை, காயவைத்து தூளாக்கி, அதை தினமும் பாலில் பனங்கற்கண்டு கலந்து சாப்பிட்டுவர, உயர் இரத்த அழுத்தத் தன்மை நீங்கும்.
சில மருந்துகளால் அலர்ஜி ஏற்பட்டு, அதனால் சிலருக்கு பாதிப்புகள் ஏற்படும், தாமரை மடல்களை நீரில் காய்ச்சி, குடிநீராகப் பருகி வர, அந்த அலர்ஜிகள் நீங்கும்.
உலர்ந்த தாமரை மடல்களை, நீரிலிட்டு,அருந்திவர, இதயம் சம்பந்தமான வியாதிகள் குணமாகும்.
தாமரை மடல்களை, நீரிலிட்டு, சிறிது பனை வெல்லம் சேர்த்து பருகிவர, சூட்டைக்குறைத்து சுரத்தைத் தணிக்கும், நீர்சுருக்கு, சிறுநீர்த்தாரை எரிச்சல் சரியாகும்.
ரோஜா குல்கந்து போல, உடலுக்கு நலம் செய்யும் தாமரை குல்கந்து.
உலர்ந்த தாமரை மடல் தூளை பனை வெல்லத்துடன் சேர்த்து, பாகு பதத்தில் காய்ச்சி, பாதுகாப்பாக வைத்துக்கொண்டு, தினமும் சாப்பிட்டுவர, மூளைக்கு வலுவூட்டி, உடல் இரத்த நாளங்களில் படிந்திருக்கும் கொழுப்பை அகற்றி, இதயத்திற்கு புத்துணர்வூட்டி, ஞாபக சக்தியை அதிகரிக்கும். வயிற்றுப்புண்ணை சரிசெய்து, உடலில் ஏற்படும் எரிச்சல் தன்மையைப் போக்கும்.
author avatar
Castro Murugan
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *