பல்கலைகழகத்துக்குள் இராணுவ டாங்கியை கொண்டு வர விரும்பும் துணைவேந்தர்..!

புதுடில்லி: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் (ஜே.என்.யு) வளாகத்தில் ஒரு ‘இராணுவ டாங்கியை’ பார்வைக்கு வைக்க விருப்பம் தெரிவித்தார். 
‘வி.கே. சிங் ஜியை பல்கலைக்கழகத்தில் பார்வைக்கு வைப்பதற்காக ஒரு இராணுவ டாங்கி வாங்க எங்களுக்கு உதவுமாறு விரும்புகிறேன்’ என்றும் ஜகதீஷ் குமார் தெரிவித்தார்.

இதன் நோக்கத்தை பற்றி பேசிய அவர், இந்த இராணுவ டாங்கியானது இந்திய இராணுவத்தின் பெரும் தியாகம் மற்றும் வீரம் ஆகியவற்றை மாணவர்களுக்கு நினைவுபடுத்தும் என்று கூறினார். இந்திய இராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினரின் பெரும் தியாகம் மற்றும் வால்டர் ஆகியவற்றை மாணவர்களுக்கு நினைவுகூறும் வகையில், ‘ஒரு இராணுவ டாங்கி தொடர்ந்து நினைவுபடுத்தும்’ என்றார் குமார்.

துணைவேந்தரின் இந்த செயல் மாணவர்களிடையே ஒரு விதமான சலசலப்பை உண்டு பண்ணுகிறது.மேலும், துணைவேந்தரின் இந்த நடவடிக்கையை எதிர்த்து சுமார் 350 மாணவர்கள் போராட்டத்தில் இடுபட்டும் வருகின்றனர். மேலும் துணைவேந்தர் ஹிந்துத்துவத்திற்கு ஆதரவாகவும் வளாகத்தினுள் மாணவர்களிடையே பிரிவினையை உண்டாக்குவதற்கு ABVP அமைப்பை பலப்படுத்தும் முயற்சியிலும், RSS அமைப்பிற்கு ஆள் சேர்க்கும் முயற்சியிலும் இந்த துணைவேந்தர் இத்தகைய செயல்களை செய்து வருகிறார்.அதுமட்டுமில்லாது மாணவர் மற்றும் பல்கலைகழக பேராசிரியர்களுக்கு எதிரான நடவடிக்கையை தொடர்ந்து துணைவேந்தர் எடுத்து வருகிறார் என்றும் JNU மாணவர் பேரவை துணை தலைவரும்,இந்திய மாணவர் சங்கத்தின்(SFI) தலைவருமான அமல் தெரிவித்தார்.

JNU பற்றி: 
ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் (JNU) 1969 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் நிறுவப்பட்டது. இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் பெயருக்கு JNU பெயரிடப்பட்டது. பல்கலைக் கழகத்தின் முதல் துணைவேந்தர் திரு.ஜி.பார்த்தசாரதி ஆவார்.. 

செய்தியாளர்:இ.சுரேஷ்

author avatar
Castro Murugan

Leave a Comment