இஞ்சி உடலுக்கு நஞ்சி?

இஞ்சி எரிப்புக் குணத்தை உடையது. உமிழ்நீர் சுரத்தலைத் தூண்டவல்லது. இதனால் உணவுப்பொருட்கள் எளிதில் விழுங்க உதவி புரிகின்றது. இஞ்சி இலைகளும், தண்டுகளும் வாசனை தரவல்லது. இஞ்சி கடுமையான கார ருசி உடையது. உலர்ந்த இஞ்சியே ‘சுக்கு’ (இலங்கையின் சில பகுதிகளில்: வேர்க் கொம்பு) என அழைக்கப்படுகிறது. 
இஞ்சியையும், சுக்கையும் உபயோகிக்கும் போது, அதன் தோலை நீக்குவது மிக முக்கியமானது. இல்லை எனில் மாறாக வயிற்றுக் கடுப்பு ஏற்படும். இஞ்சியை சுத்தம் செய்யும்போது அதன் மேல் தோலை நன்றாக நீக்க வேண்டும் அதன் மேல் தோல் நஞ்சாகும்.(?) அதே போல் சுக்கை சுத்தம் செய்யும்போது அதன் மேல் சுண்ணாம்பை தடவி காயவைத்து பின் அதை நெருப்பில் சுட்டு பின் அதன் தோலை நன்கு சீவி எடுக்கவேண்டும்.
author avatar
Castro Murugan

Leave a Comment