டீசலை போல சமையல் எரிவாயு மானியத்தையும் நிறுத்த அரசு செய்யும் வேலை

இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஏறியுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதில்  மானியம் அல்லாத சமையல்  சிலிண்டர்  ரூ.93 உயர்த்தப்பட்டு ௧௪.2 கிலோ மானியம் அல்லாத சிலிண்டர் 7௪2ஆகவும் அதேபோல் மானிய  சிலிண்டர் ரூ. 4.50 உயர்த்தப்பட்டு  ௪95.69ஆகவும் நிர்ணயம் செய்துள்ளன.

இந்த விலை  உயர்வானது  புதன்கிழமை (நவ.1) முதல் அமலுக்கு வந்துள்ளது.அதேபோல்  19 கிலோ வணிக சிலிண்டரின் விலையும் புதன்கிழமை முதல்  ரூ.1,310.50 ஆக உயர்ந்துள்ளது.

இதேபோல  எண்ணெய் நிறுவனங்கள், பிரதி  மாதம் 1-ம் தேதி விமான எரிபொருளின் விலையையும் திருத்தியமைத்து வருகின்றது. இந்த விலை மாறுபாடானது, கச்சா எண்ணெய் விலை மற்றும் அந்நிய செலாவணி ஆகியவற்றை  பொறுத்து மாறுபடும்.

டீசலுக்கான மானியதிலிருந்து வெளிவந்த வழியை பின்பற்றி, அரசு சமையல் எரிவாயு மானிய சுமையிலிருந்து வெளியேற மத்திய அரசு சார்பில்  திட்டமிடபப்ட்டுள்ளது. இதன்படி  சமையல் எரிவாயுவுக்கான விலை தொடர்ந்து உயர்த்தப்படுகிறது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment