நிதி ஒதுக்கிடு குறைவால் ராணுவ தளபதி பதவி விலகல்!!

பாரீசு, ஜூலை 20 பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடு செய்வதில் அதிபர் இமானுவல் மேக்ரானுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அந்த நாட்டு ராணுவ தலைமைத் தளபதி பியர்டே வில்லியர்ஸ் (60) பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.பிரான்சில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் புதிதாக அதிபர் பொறுப்பை ஏற்ற இமானுவல் மேக்ரான் (39), பாதுகாப்புப் படைகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் 85 கோடி யூரோவை (சுமார் ரூ.6,248 கோடி) குறைக்கவிருப்பதாக அறிவித்திருந்தார்.இந்த நிலையில், ராணுவ தலைமைத் தளபதி பியர்டே வில்லியர்ஸ் கடந்த வாரம் நாடாளுமன்றக் குழுவிடம் கூறுகையில், ராணுவப் படைகளின் தலைவர் என்ற முறையில், பாதுகாப்புக்கான நிதியில் 85 கோடி யூரோவைக் குறைக்க அனுமதிக்கப் போவதில்லை என்று கூறி அதிர்வலையை ஏற்படுத்தினார்.அதனைத் தொடர்ந்து, கடந்த வார இறுதியில் செய்தித்தாள் ஒன்றுக்கு பேட்டியளித்த அதிபர் இமானுவல் மேக்ரான், ”இங்கு நான்தான் உண்மையான தலைவன். என்னுடைய கருத்துக்கு இணங்க ராணுவ தலைமைத் தளபதிதான் தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.நாட்டின் ராணுவ தலைமைத் தளபதியை அதிபர் மேக்ரான் அவமதித்துவிட்டதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டினர்.எனினும், பதவியேற்ற இரண்டே மாதங்கள் ஆகியுள்ள நிலையில், தனது ஆட்சியதிகாரத்தை நிலைநாட்ட மேக்ரானுக்கு இதைவிட்டால் வேறு வழியில்லை என்று மற்றொரு சாரார் கூறினர்.இந்தச் சூழலில், ராணுவ தலைமைத் தளபதி பதவியிலிருந்து விலகுவதாக பியர்டே வில்லியர்ஸ் புதன்கிழமை அறிவித்தார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள் ளதாவது:முப்படைகளின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுவதாக முடிவு செய்துள்ளேன். பிரான்சு நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் தேவையான பாதுகாப்பை உறுதி செய்வதற்கு எனது இந்த நட வடிக்கை மிக அவசியம் என்று கருதுகிறேன்.எனது பதவிக் காலம் முழு வதும், பாதுகாப்புக்குத் தேவையானவற்றை அரசியல்வாதி களிடம் கேட்கும் உரிமை எனக்கு உண்டு என்று நம்பினேன் என்று அந்த அறிக்கையில் பியர்டே வில்லியர்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

author avatar
Castro Murugan

Leave a Comment