சிகரெட்டை நிறுத்த எளிய வழிமுறைகள்!

புகைப்பழக்கத்தைக் கைவிட முடியும் என்று உறுதியாகநம்புங்கள்.
உங்கள் லட்சியப் பயணத்தைத் தொடங்கியவுடன் புகைப்பழக்கத்தோடு தொடர்புடைய தீப்பெட்டி, லைட்டர், ஆஷ் ட்ரே போன்ற பொருட்களைத் தூக்கி எறியுங்கள்.
புகைப்பிடிக்கும் எண்ணம் வரும்போது உங்களுடைய குழந்தை, நண்பர் போன்ற மனதுக்கு பிடித்தநபரோடு நேரத்தைச் செலவழியுங்கள். புகைப்பழக்கம் இல்லாத நபர்களோடு அந்த நேரத்தைச் செலவழித்தால் அவர்களது நலனை மனதில் நினைத்தாவது புகைப்பழக்கத்தைக் குறைக்க முடியும். 
 புகைக்கத் தோன்றும் நேரங்களில் கிரீன் டீ அல்லது ஏதாவதொரு பழச்சாறு அருந்தும் பழக்கத்துக்கு மாறுங்கள். ஊட்டச்சத்துள்ள தானியங்கள், பழங்கள் போன்ற உடலுக்கு நலன் தரக்கூடிய தின்பண்டங்களைச் சாப்பிடும் பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
புகைப்பழக்கம் மன அழுத்தத்துக்கு முக்கிய காரணமாக இருப்பதால், மன அழுத்தம் ஏற்படும்போது நகைச்சுவை காட்சிகளைப் பார்ப்பது அல்லது விளையாட்டுகளில் ஈடுபடுவது என்று மனதை மாற்றுங்கள்.
புகைப்பழக்கத்தை கைவிட ஆரம்பித்து மூன்று மாதங்கள் கழித்து, நீங்கள் செய்த செயல்களை எல்லாம் நிதானமாக நினைத்துப் பாருங்கள். அப்போது உங்களைச் சுற்றியும், உங்களுக்குள்ளும் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் உங்களால் உணர முடியும். 
உங்களது வாழ்வில் ஏற்பட்டிருக்கும் நல்ல மாற்றங்களைச் சொல்லி, உங்களது நண்பர்களையும் அதன்பிறகு புகைப் பிடிக்க அனுமதிக்காதீர்கள்
author avatar
Castro Murugan

Leave a Comment