அமெரிக்காவிலும் புதிய சாதனை படைத்த மெர்சல்! கான் நடிகர்களின் சாதனையை முறியடித்த இளைய தளபதி விஜய்..

Image result for mersal in america release celebration
 விஜய் நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் திரைக்கு வந்த படம் ‘மெர்சல்’. இப்படத்தைப் பார்க்க அவரது  லட்சகணக்கான ரசிகர்கள் காத்திருந்த  அவர்களுக்கு திரை விருந்தாக படம் நிலையில் வெளிவந்துள்ளது.
இப்படத்திற்கு அமெரிக்காவில் நல்ல வரவேற்பு இருந்தது. ஏனெனில், ஏற்கெனவே விஜய் – அட்லீ கூட்டணியில் வெளிவந்த ‘தெறி’ அமெரிக்காவில் செம்ம ஹிட் அடித்தது.
ரஜினி படங்களுக்குப் பிறகு அமெரிக்காவில் ப்ரீமியரில் அதிக வசூல் செய்தது விஜய்யின் ‘மெர்சல்’ தான் என அமெரிக்க விநியோக நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் மட்டுமல்லாது கடல் தாண்டி பல நாடுகளிலும் ரிலீஸ் ஆகியிருக்கிறது மெர்சல். 3500 தியேட்டர்களுக்கு மேல் பலத்த ஆதரவோடு உலகல் முழுக்க வெளியாகியிருக்கிறது மெர்சல் திரைப்படம். இந்நிலையில் மெர்சல் ப்ரீமியர் நேற்று அமெரிக்காவில் தொடங்க, இப்படம் அங்கு 357k டாலர் வசூல் செய்துள்ளது.
தென்னிந்தியாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் என ‘மெர்சல்’ மூலம் இன்னொருமுறை நிரூபித்திருக்கிறார் விஜய். அமெரிக்காவில் செவ்வாய்க்கிழமை வெளியான இந்தப் படம் முதல் நாளில் 357K டாலர் வசூலித்திருக்கிறது. இந்தத் தகவலை அமெரிக்காவில் படத்தை விநியோகித்த அட்மோஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

இதற்கு முன் ஆமிர்கானின் தங்கல் திரைப்படம் தான் பாக்ஸ்  ஆபிஸ் சாதனனை    செய்திருந்தது.                  தற்போது அமெரிக்காவில் 132 இடங்களில் மெர்சல் வெளியாகியுள்ளது.        வார நாட்களில் ரிலீஸ் ஆகி இந்த அளவுக்கு வெற்றியைப் பெறுவது பெரிய விஷயம். ஆமிர்கான் நடிப்பில் வெளிவந்த ‘டங்கல்’ படம் 327K டாலர் வசூல் செய்தது. ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த ‘ராயிஸ்’ படம் 347K டாலர் வசூலித்ததே இதுவரை சாதனையாக இருந்து வந்தது.

இந்நிலையில் அமெரிக்காவில் இந்த சாதனையை படைத்த முதல் இந்திய படம் என்ற பெருமையை  மெர்சல் படம் பெற்றுள்ளது .இதனை அனைத்து விஜய் ரசிகர்களும் சந்தோசமாக கொண்டாடி வருகின்றனர் . 
author avatar
Dinasuvadu desk

Leave a Comment