மஹாராஷ்டிராவில் பாஜக – சிவசேனா கூட்டணி முடிவாகியது….!!

  • கடந்த சில காலமாக பாஜகவை சிவசேனா கடுமையாக எதிர்த்து வந்தது.
  • நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 25 தொகுதிகளிலும் , சிவசேனா 23 தொகுதிகளிலும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றனர்.

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருகையில் மத்தியில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜக_வும் , காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகின்றது.மாநிலத்துக்கு மாநிலம் மாநில கட்சிகளுடன் கூட்டணி குறித்த வியூகங்களை வகுத்து வருகின்றனர்.

இந்நிலையில் , மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக-சிவசேனா கூட்டணி ஆட்சி செய்து வருகின்ற சூழலில் கடந்த சில நாட்களாக மத்திய அரசை கடுமையாக எதிர்த்தது.இதனால் இவர்களுக்குள் மீண்டும் கூட்டணி அமையுமா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 25 தொகுதியிலும், சிவசேனா 23 தொகுதியில் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற இருக்கும் சட்ட மன்ற தொகுதியில் இரு கட்சிகளும் சம அளவிலான தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக உத்தவ் தாக்ரேவும், அமித் ஷாவும் கூட்டாக அறிவித்தனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment