ஜெய்ப்பூரில் இன்று பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம்.!

ஜெய்ப்பூரில் இன்று பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம்.!

கடந்த ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியை விட்டு வெளியேறிய ஆறு எம்.எல்.ஏக்கள் காங்கிரசில் சேர்ந்தனர்.பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏக்கள் இணைப்புக்கு இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெறவுள்ளது. இந்நிலையில், 6 பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டால், பா.ஜ.க எம்.எல்.ஏ.க்களுடன் காங்கிரஸ் தொடர்பு கொள்ள முயற்சிக்கும்,  இதனால், 15 முதல் 20 பாஜக எம்எல்ஏக்கள் குஜராத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் ஜெய்ப்பூரில் உள்ள கிரவுன் பிளாசா ஹோட்டலில் இன்று  மாலை 4 மணிக்கு நடைபெறும் என பாஜக மாநிலத் தலைவர் டாக்டர் சதீஷ் பூனியா தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் சட்டமன்றக் கூட்டத்தொடர் வரை ராஜஸ்தானின் அரசியல் நிலைமை குறித்து விவாதிக்க இந்த கூட்டம் நடைபெறும் என கூறப்படுகிறது.

மேலும், பாஜக எம்எல்ஏக்கள் இன்று முதல் வரும்-14 வரை ஜெய்ப்பூரில் உள்ள கிரவுன் பிளாசா ஹோட்டலில் தங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் வருகின்ற 14-ம் தேதி சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Posts

#7.5%-Reservation: இதற்கு ஏன் 45 நாட்கள் தாமதம் ? ஏன் கிடப்பில் போட்டார்கள் ? - மு.க.ஸ்டாலின் டீவீட்
ஜம்மு-காஷ்மீர் பயகங்கரவாத தாக்குதலில் பாஜாகவினர் மூவர் பலி
#IPL2020 : கெய்க்வாட் அரைசதம் ! கடைசி பந்தில் சென்னை அணி வெற்றி
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு -அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
நிதிஷ் ராணா அதிரடி.. 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கவுள்ள சென்னை!
டாஸ் வென்ற சென்னை.. முதலில் பேட்டிங் செய்ய காத்திருக்கும் கொல்கத்தா!
தல 61 மரண மாஸ் கூட்டணி.... உற்சாகத்தில் ரசிகர்கள்..!
அமெரிக்க அதிபர் தேர்தல்: வாக்குப்பெட்டியில் இடம்பெற்றிருந்த "தமிழ்"
திருமண விழாவில் எம்ஜிஆர்-ன் பாடலை பாடி அசத்திய அமைச்சர் வீரமணி! இணையத்தில் வைரலாகும் விடீயோ!
அணை மேம்பாட்டு மற்றும் புனரமைப்பு திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!