காதல் திருமணம் செய்த பாஜக எம்.எல்.ஏ மகள் - மருமகனை கடத்திய எம்.எல்.ஏ !

உத்திரபிரதேச மாநிலம் பித்தாரி ஜெயின்பூர் தொகுதி பாஜக ஏம்.எல்.ஏ ஆக இருப்பவர்

By dinesh | Published: Jul 15, 2019 07:07 PM

உத்திரபிரதேச மாநிலம் பித்தாரி ஜெயின்பூர் தொகுதி பாஜக ஏம்.எல்.ஏ ஆக இருப்பவர் ராஜேஷ் மிஸ்ரா. இவருடைய மகள் சாக்ஷி மிஸ்ரா. இவர் பாட்டியல் இனத்தைச் சார்ந்த அஜிதேஷ் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணத்திற்கு பாஜக எம்.எல்.ஏ கடும் எதிரப்பு தெரிவித்து வந்தார். இந்நிலையில்,தங்களது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் தங்களுக்கு காவல்துறை உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தனர்.  மேலும் எங்களது உயிருக்கு ஏதேனும்  ஆனால் அதற்கு என் தந்தையே பொறுப்பு என்று கூறி வீடியோ ஓன்று வெளியிட்டு இருந்தார்.   இந்த வழக்கின் விசாரணை இன்று காலை அலகாபாத் நீதிமன்றத்தில் வந்தது. சாக்ஷி மற்றும் அவரது கணவர் நீதிமன்ற வாசலில் நின்றிருந்த நிலையில், திடீரென கருப்பு காரில் வந்த சிலர் துப்பாக்கி முனையில் அஜிதேஷ் குமாரை கடத்தி சென்றனர். முதற்கட்ட விசாரணையில், கடத்திய கார்கள் ஆக்ரா பதிவெண் கொண்டது என்று தெரிகிறது.
Step2: Place in ads Display sections

unicc