3 மாநிலங்களுக்கு பாஜக மாநில தலைவர்கள் நியமனம் ! தமிழகத்திற்கு எப்போது ?

மத்திய பிரதேசம், சிக்கிம், கேரளா ஆகிய மூன்று மாநிலங்களுக்கு பாஜக மாநில தலைவர்கள்

By Fahad | Published: Apr 01 2020 08:34 PM

மத்திய பிரதேசம், சிக்கிம், கேரளா ஆகிய மூன்று மாநிலங்களுக்கு பாஜக மாநில தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  மத்திய பிரதேசம், சிக்கிம், கேரளா , தமிழகம்  உள்ளிட்ட  மாநிலங்களில் பாஜக மாநில தலைவர் பதவிகள் காலியாக இருந்து வந்தது.இதற்கு இடையில்தான் பாஜக தேசிய தலைவராக சமீபத்தில் ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில்  பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா கேரளா, சிக்கிம் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களுக்கு பாஜக தலைவர்களை நியமித்துள்ளார்.அதன்படி மத்திய பிரதேச மாநில தலைவராக விஷ்ணு தத் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.கேரள மாநிலத்தின் தலைவராக சுரேந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.சிக்கிம் மாநில தலைவராக தல் பகதூர் சவுகான் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழகத்துக்கு மட்டும் பாஜக  தலைவர் நியமனம் செய்யப்படவில்லை.எனவே விரைவில் தமிழக பாஜக தலைவர் யார் என்ற அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.