பாஜகவும் , அதிமுகவும் கூட்டணி கட்சி அல்ல –  தம்பிதுரை

பாஜகவும் , அதிமுகவும் கூட்டணி கட்சி அல்ல என்று மக்களவை துணை சபாநாயகர்  தம்பிதுரை தெரிவித்துள்ளளார்.

இது தொடர்பாக  மக்களவை துணை சபாநாயகர்  தம்பிதுரை கூறுகையில், தமிழகத்துக்கு வரவேண்டிய நிலுவைத் தொகையும் வரவில்லை,கஜா புயலுக்கு கேட்ட நிதியும் வரவில்லை. இப்படி தமிழகத்துக்கு உதவாமல் மத்திய அரசு வஞ்சித்துக் வருகிறது. இதனை சொல்வதில் என்ன தவறு இருக்கிறது? என்றும் பாஜகவும் , அதிமுகவும் கூட்டணி கட்சி அல்ல. தேர்தல் தேதி அறிவித்த பின்னர் பொதுக்குழு, செயற்குழு கூடி கூட்டணி குறித்து முடிவு செய்யும். தனிக்கட்சி தொடங்கும அளவுக்கு எனக்கு தகுதியில்லை  என்று மக்களவை துணை சபாநாயகர்  தம்பிதுரை தெரிவித்துள்ளளார்.

Leave a Comment