உழைப்பாளர் தினத்தில் ஒரு உழைப்பாளியின் பிறந்தநாள்.! தல அஜித்தின் சுவாரசியம்.!

நடிகர் அஜித் தனது 49 வது பிறந்தநாளை வரும் மே 1 ஆம் தேதியான உழைப்பாளர் தினத்தில்

By balakaliyamoorthy | Published: Apr 29, 2020 04:59 PM

நடிகர் அஜித் தனது 49 வது பிறந்தநாளை வரும் மே 1 ஆம் தேதியான உழைப்பாளர் தினத்தில் கொண்டாடவுள்ளார். திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்களிடமிருந்து பிறந்தநாளை முன்னிட்டு தற்போதே இணையத்தில் ட்ரண்ட் செய்து வருகின்றனர். சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அஜித், இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக ஜொலிப்பதற்குக் காரணம் அவரது கடின உழைப்பு தான். இவரது திரை வாழ்க்கை வெற்றியையும் தோல்வியையும் சமமாகக் கொண்டது. ஆனால், அவைகள் எந்த விதத்திலும் அவருடைய புகழிற்கு களங்கம் விளைவிக்கவில்லை. பிறந்தது ஹைதராபாத், அப்பா பாலக்காட்டு ஐயர், அம்மாவின் தாய்மொழி சிந்தி, கொல்கத்தாவைச் சேர்ந்தவர். அதனால் ஆரம்ப காலங்களில் தமிழ் பேச ரொம்பவும் கஷ்டப் பட்டார் நடிகர் அஜித். இவருக்கு நடிப்பதை விட, ரேஸ் கார் ஓட்டுவதில் தான் அஜித்துக்கு ஆர்வம் அதிகமாக இருந்து வந்தது. 1993 ல் அமராவதியில் நடிகரான பின்பும் கூட அவர், ரேஸ் ஆட்டோக்களை ஓட்ட மறக்கவில்லை. சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ரேஸ் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அதுமட்டுமில்லாமல் சர்வதேச ரேஸ் பந்தயங்களிலும் கலந்துக் கொண்டுள்ளார். 2003-ல் ஃபார்முலா ஆசியா பி.எம்.டபிஸ்யூ சாம்பியன்ஷிப் மற்றும் 2010-ல் ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப் ஆகிய போட்டிகளில் பங்கேற்றுள்ள முதல் நடிகரும் ஆவர். இருப்பினும் விபத்தில் சிக்கிக் கொண்டதால், படங்களில் மட்டும் கவனம் செலுத்தத் தொடங்கினார். பின்னர் அமர்க்களம் படத்தில் நடிக்கும் போது, அவருடன் நடித்த நடிகை ஷாலினியை காதலித்தார். அப்போது இந்த விஷயம் மீடியாவில் கிசுகிசுக்களாக வெளிவந்தது. இரு குடும்பத்தின் சம்மதத்துடன் 2000 ஆம் ஆண்டு ஷாலினியை திருமணம் செய்துகொண்டார் அஜித். இப்போது இவர்களுக்கு அனோஷ்கா, ஆத்விக் என இரு குழந்தைகள் இருக்கிறார்கள். எப்போதுமே பொது இடங்களில் தன்னைக் காட்டிக்கொள்வது அஜித்துக்கு பிடிக்காது. அதனால் அவருடைய ரசிகர்கள் இவரை வெள்ளித்திரையில் மட்டுமே பார்க்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது. அதனை தற்போது வரை கடைபிடித்து வருகிறார். அஜித்திடம் பிடித்தது என்று கேட்டால் எப்போதும் அனைவரும் சொல்லுறது அவரது நேர்மையான பேச்சு என கூறுவார்கள். தமிழ் சினிமா நடிகர்கள் கொஞ்சம் ஜொலிக்க ஆரம்பித்துவிட்டாலே, அவர்களுக்கு அரசியல் ஆசை வந்துவிடும். ஆனால் இதிலிருந்து விலகியே இருக்கிறார். பின்னர் பட்டிதொட்டி எங்கும் அஜித் ரசிகர் மன்றம் இருந்தன. ஆனால் தன்னுடைய ரசிகர் மன்றம் தவறாக செயல்படுவதை அறிந்து 40-வது பிறந்தநாளின் போது அதனை கலைத்தார். குறிப்பாக 2001-ல் முருகதாஸ் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான தீனா படத்தில் தலை என்று பெயர் ஆரம்பித்தது, அது தற்போது வரை அனைவரின் மனதில் தலையாக பதிவாகிவிட்டார் நடிகர் அஜித். தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது இதனால் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது. இவர் மென்மேலும் பயணத்தை தொடர இந்திய சினிமாவில் ஒரு பெரிய மைல்கல்லாக வளர மனமார்ந்த எங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். happy birthday thala ajith.
Step2: Place in ads Display sections

unicc