காவலர் தேர்வில் வசூல்ராஜா பாணியில் காப்பி! மாட்டிக்கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இளைஞர்!

பீகார் மாநிலத்தில் காவலர் தேர்வு கடந்த 12ஆம் தேதி நடைபெற்றது. 

By manikandan | Published: Jan 14, 2020 04:03 PM

  • பீகார் மாநிலத்தில் காவலர் தேர்வு கடந்த 12ஆம் தேதி நடைபெற்றது. 
  • அந்த தேர்வில் தனஞ்செய் குமார் என்கிற வாலிபர் வசூல் ராஜா பாணியில் காதில் இயர் போன் மாட்டிக்கொண்டு காப்பி அடித்துள்ளார். 
பீகார் மாநிலத்தில் காவலர் பணி காலிப்பணியிடங்களுக்காக கடந்த 12ஆம் தேதி தேர்வு நடைபெற்றது. முஷாஃபபூர் எனும் ஊரிலும் இந்த தேர்வு நடைபெற்றது. அதில், தனஞ்செய் குமார் என்பவர் காவலர் தேர்வில் கலந்துகொண்டார். தேர்வு ஆரம்பித்தது முதலே தனஞ்செய் குமார், தொடர்ந்து சத்தம் குறைவாக பேசிகொண்டே இருந்துள்ளார். இதனை அங்கிருந்த தேர்வு கண்காணிப்பாளர்கள் கண்காணித்து சந்தேகத்தின் பெயரில் அவரை அழைத்து சோதனையிட்டனர். அவர் வசூல் ராஜா படத்தில் கமல்ஹாசன் செய்வது போல காதில் ஒரு ஹெட் போன் மாட்டிக்கொண்டு பிட் அடித்துள்ளார். சோதனைக்கு பயந்து அந்த ஹெட் போனை காதுக்குள் தள்ளிவைத்துள்ளார். அது காதுக்குள் மாட்டிக்கொண்டுவிட்டது. அதனை  எடுக்க முடியாமல் தனஞ்செய் குமார் போராடியுள்ளார். அதன் பின்னர் ஹெட் போனை அகற்ற மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Step2: Place in ads Display sections

unicc