பீகார் வெள்ளம்: மேலும் 2 பேர் உயிரிழப்பு பாதிப்பு 50 லட்சத்தை நெருங்கியது .!

பீகாரில் வெள்ள நிலைமை மோசமடைகிறது. மேலும், 2 பேர் மரணம், பாதிப்பு

By gowtham | Published: Aug 02, 2020 07:00 AM

பீகாரில் வெள்ள நிலைமை மோசமடைகிறது. மேலும், 2 பேர் மரணம், பாதிப்பு 50 லட்சத்திற்கு நெருங்கியது.

மாநில பேரிடர் நிர்வாகம் வெளியிட்டுள்ள புல்லட்டின் படி, முசாபர்பூர் மாவட்டத்தில் இருந்து இரண்டு பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று பீகாரில் வெள்ளம் மேலும் இரண்டு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது இதனால் இறப்பு எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் பேரழிவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 க்கு லட்சத்தை  நெருங்கியது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை, 14 மாவட்டங்களில், 49.05 லட்சமாக இருந்தது, இது கடந்த வெள்ளிக்கிழமை 45.39 லட்சமாக உள்ளது. பாதிக்கப்பட்ட கிராமங்களின் எண்ணிக்கை 1,012 இலிருந்து 1,043 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையில், நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில்  29 அணிகளுடன் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது . இன்றுவரை வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.92 லட்சம் ஆகும் .

பாதிக்கப்பட்ட 11 மாவட்டங்களில் செயல்பட்டு வரும் 1,340 சமூக சமையலறைகளில் 9 லட்சம் பேருக்கு உணவளிக்கப்பட்டது.

Step2: Place in ads Display sections

unicc