பிக்பாஸ் ஒரு நாடகம்! அதில் நாங்கள் நடித்தோம் - கவினுடன் காதலில்லை! உண்மையை போட்டுடைத்த லொஸ்லியா!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஈழத்து பெண் லொஸ்லியா, அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று சில நாட்களிலேயே பல ரசிகர்களை தன வசப்படுத்தியுள்ளார். இவரது நடத்திற்கும், பாட்டிற்கும் பலர் அடிமைகளாக இருந்தனர். இதனையடுத்து, இவருக்கென்று இணையத்தில் பல ஆர்மி குழுக்களும் உருவாக்கப்பட்டது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் கவின் மற்றும் லொஸ்லியா இருவருக்கும் இடையே ஏற்பட்ட காதல் அனைவராலும் பெரிய அளவில் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில், லொஸ்லியா தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், 'அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு நாடகம். அதில் நாங்கள் அனைவரும் நடிக்க தான் செய்தோம். கவினையும் என்னையும் ஒன்றாக்கி பதிவிடாதீர்கள்.' என பதிவிட்டுள்ளார்.