biggboss 3: பிக்பாஸ் வீட்டிற்குள் டான்ஸ் மாஸ்டரின் அட்டகாசமான நடனம்!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில், தற்போது இந்த வீட்டிற்குள் 12 பிரபலங்கள் மட்டுமே உள்ளனர். இதனையடுத்து பிக்பாஸ் வீட்டில் உள்ள பிரபலங்களுக்கு  நாளுக்குநாள் புதிய, புதிய டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இதனிடையில், இவர்களுக்கிடையே மோதல்களும் ஏற்படுகிறது.

இந்நிலையில், தற்போது இவர்களுக்கு, திரையுலக நடிகர்களின் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டு, அதற்கேற்றவாறு உடையணிந்து, ஆடலும் பாடலுமாக கும்மாளம் போட்டு வருகின்றனர். இதனையடுத்து, அங்குள்ள பிரபலங்கள் டான்ஸ் மாஸ்டர் சாண்டியுடன் இணைந்து நடனமாடி உள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.