biggboss 3: வேற மாறி நம்ம போய்ட்டு இருக்கோம்! பிக்பாஸ் வீட்டுக்குள்ள யாரு வந்திருக்காங்கனு பாருங்களேன்!

பிகாபஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது 100 நாட்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் இறுதி சுற்றுக்கு சாண்டி, முகன், லொஸ்லியா மற்றும் ஷெரின் ஆகியோர் முன்னேன்றியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்கள் மீண்டும் வருகை தந்துள்ளனர். இந்நிலையில், பிக்பாஸ் இல்லமானது கடந்த சில நாட்களாக கலை கட்டி வருகிறது. இந்த நிகழ்ச்சியில், தொடர்ந்து சில நாட்களாக சிறப்பு விருந்தினர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், மீண்டும் ரியோ, தாடி பாலாஜி மற்றும் சில சிறப்பு விருந்தினர்களும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர்.