பிக்பாஸில் கலந்துகொள்ள கமலஹாசன் எத்தனை நாள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளார் தெரியுமா?!

பிக்பாஸ் நிகழ்ச்சியானது விஜய் டிவியில் தற்போது மூன்றாவது சீசனை வெற்றிகரமாக கடந்து வருகிறது.  இந்த மூன்று சீசனையும் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். கமல்ஹாசனுக்கும் உள்ளே உள்ள போட்டியாளர்களுக்கும் சம்பளம் எவ்வளவு என்று வெளியில் ஒரு பட்டியலே வைத்துள்ளனர். உண்மையில் அவர்கள் சம்பளம்தான் என்ன என்பது தற்போது வரை தெரியவில்லை.

தற்போது நடிகர் கமல்ஹாசன் இந்த பிக்பாஸ்  போட்டிக்காக எத்தனை நாள் கால்ஷீட் கொடுத்துள்ளார் என்ற விவரம் வெளியாகியுள்ளது. அதாவது, ஒரு  சீசனுக்கு 16 நாள் மட்டுமே கால்ஷீட் ஒதுக்கியுள்ளாராம். அதாவது வாரம் வாரம் வரும் சனி ஞாயிறு மட்டும் வருவதால் இதற்கு ஏற்றார் போலும், அவருடைய மார்க்கெட் மதிப்பு அடிப்படையிலும் அவருக்கு சம்பளம் வழங்கப்படுகிறது  என கூறப்படுகிறது.

மற்ற போட்டியாளர்களுக்கு அவர்களின் பிரபல தன்மை கணக்கீட்டு சம்பளம் பேசப்படும் எனவும்,  பிரபலமில்லாதபோட்டியாளர்களுக்கு விஜய் டிவி கொடுக்கும் சம்பளத்தை ஏற்றுக்கொண்டு போட்டியில் கலந்துகொண்டு பிரபலம் ஆகின்றனர். என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.