உடலை ஊக்கப்படுத்தும் மிதிவண்டி பயிற்சி.

  • மிதிவண்டி பயிற்சியால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கியமான நன்மைகள்.

நமது வாழ்க்கையில் உடற்பயிற்சி என்பது முக்கியமான ஒன்றாகும். இது நமது உடலுக்கு ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் தரக் கூடியது. இந்த உடற்பயிற்சியில் பல வகையான உடற்பயிற்சி உண்டு.

இந்த உடற்பயிற்சிகளில் மிதிவண்டி பயிற்சியும் ஒன்று. இது மற்ற உடற்பயிற்சிகளை விட மிக சிறந்த உடற்பயிற்சி என்றே சொல்லலாம். நம் அவசர ஓட்டத்தில் எதுமே நம் கை தூரத்தில் இருக்க வேண்டும் என்ற ஆசையில் ஆரோக்கியத்தை அள்ளித்தந்த மிதிவண்டி ஓட்டும் பயனுள்ள பழக்கத்தை மறந்தே போய்விட்டோம்.

Image result for மிதிவண்டி பயிற்சி

மிதிவண்டிப் பயணம் நம் முன்னோர்கள் நமக்கு விட்டு சென்ற ஒரு உடல்நலப் பயணம். மிதிவண்டி மிதிப்பதால் நம் கால்கள் வலுப் பெறுவதோடு நம் இதயத்தின் இயங்கு திறனை வலுபடுத்தும் என்பது மருத்துவர்கள் நிருபித்துள்ளனர்.

கொழுப்பு

உடல் எடை குறைய வேண்டும் என்று விரும்புபவர்கள் இந்த மிதிவண்டி பயிற்சியை மேற்கொள்ளலாம். அரைமணி நேர மிதிவண்டி பயிற்சி குறைந்தது உடம்பில் உள்ள 300 கலோரி கொழுப்பின் அளவை எரிக்கும் சக்தி வாய்ந்தது.

Image result for உடல் எடை

இந்த பயிற்சி நமது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பினை கரைத்து, உடல் எடையை குறைத்து ஆரோக்கியத்துடன் வாழ வழிவகுக்கிறது.

இதய நோய்

Image result for இதய நோய்

இதய நோய் உள்ளவர்கள் மிதிவண்டி பயிற்சி மேற்கொண்டால் இதய நோயில் இருந்து விடுதலை பெறலாம். இது இரத்த ஓட்டத்தைச் சீராக்குவதால் இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பை தவிர்த்து இரத்தக் கொதிப்பு, இதய நோய்களிலிருந்து நம்மை முற்றிலும் பாதுகாக்கிறது.

சுவாச கோளாறு

Image result for சுவாச கோளாறு

இந்த மிதிவண்டி பயிற்சி சுவாச கோளாறுகளை சரி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அரை மணி நேர பயிற்சியின் போது சுவாசம் சீராக்கபடுவதால் மூளைக்குத் தேவையான சுத்தமான பிராணவாயு கிடைக்கிறது. இதனால் மூளை சீராக இயக்கப்படும் போது தேவையற்ற பயம், மன அழுத்தம் போன்ற நோய்கள் நம்மை  நெருங்காது.

இடுப்பு சதை

பலரும் இன்று சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று உடல் எடை. இடுப்பு சதையை குறைப்பதில் மிதிவண்டி மிக முக்கிய பங்கை வகிக்கிறது.

Image result for இடுப்பு சதை

இடுப்பில் அதிகமாகத் தேங்கும் கொழுப்பைக் குறைக்க மருத்துவர்களாலும், உடற்பயிற்சி வல்லுனர்களாலும் பரிந்துரைக்கப்படும் உடற்பயிற்சியில் மிதிவண்டிப் பயற்சி மிக முக்கிய இடம் வகிக்கிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment