135 கோடிக்கு விற்கப்பட்ட தளபதியின் பிகில்! வசூல் சாதனை படைக்குமா?!

தளபதி விஜய் நடிப்பில் அடுத்த வார வெள்ளி கிழமை வெளியாக உள்ள திரைப்படம் பிகில். இந்த படத்தை அட்லீ இயக்கியுள்ளார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர், பாடல்கள் என அனைத்தும் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வருவதால் இப்படத்திற்கு வரவேற்பு அதிகமாக உள்ளது.
இதனால் இப்படத்தின் வியாபாரம் இதுவரை இல்லாத தளபதி விஜய் படங்களை விட அதிக விலைக்கு விற்கப்பட்டு வருகிறதாம். இப்படம் தமிழ் நாட்டில் மட்டுமே அனைத்து ஏரியாக்களில் சேர்த்து 83.55 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாம். மேலும் உலகம் முழுக்க சேர்த்து 135 கோடிக்கு பிகில் திரைப்படம் விற்கப்பட்டுள்ளதாம்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.