3.1 பில்லியன் மதிப்புள்ள பங்குகளை விற்ற பெசோஸ்.!

3.1 பில்லியன் மதிப்புள்ள பங்குகளை விற்ற பெசோஸ்.!

அமெரிக்காவின் முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் டெக் நிறுவனமாகத் திகழும் நிறுவனம் அமேசான். இந்த நிர்வாகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் பெசோஸ் சமீபத்தில் 3.1 பில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு முழுவதும் அவர் 2.8 பில்லியன் மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளார். இந்த ஆண்டு நிறுவனத்தின் பங்குகள் 73 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. பெசோஸ் தனது ராக்கெட் நிறுவனமான ப்ளூ ஆரிஜினுக்கு(Blue Origin) நிதியளிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1 பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை விற்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பெசோஸ் தனது வர்த்தக திட்டத்தின் மூலம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் சுமார் 4.1 பில்லியன் மதிப்புள்ள பங்குகளை பெற்றுள்ளார். கடந்த ஒருவாரத்தில் 7.2 பில்லியன் லாபத்தை பெசோஸ் பெற்றுள்ளார். பெசோஸ் தற்போதைய சந்தை விலையில் சுமார் 174.64 பில்லியன் மதிப்புள்ள 54.5 மில்லியன் பங்குகளை வைத்துள்ளார்.

author avatar
murugan
Join our channel google news Youtube