கர்ப்பிணி பெண்களே ஜாக்கிரதை….! கருச்சிதைவுக்கு இது தான் காரணமாம்….!!!

கர்ப்பிணி பெண்களை பொறுத்தவரையில் எப்போதுமே மிகவும் ஜாக்கிரதையாக தான் இருக்க வேண்டும். குழந்தை என்பது இறைவன் கொடுக்கும் வரம். அந்த குழந்தையை கர்ப்பத்தில் உருவான நாள் முதற்கொண்டு, அது இந்த உலகிற்கு வரும் நாள் வரை மிக கவனமாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். மனிதன் இறந்தால், மரணம் என்பது போல, கரு இறந்தால் அபார்ஷன் என்று குறிப்பிடுகிறோம்.

கருச்சிதைவு :

கருப்பையில் வளரும் ஓர் உயிர் முழுவதுமாக வளர்ந்து, அம்மாவின் வயிற்றிலிருந்து வெளிவந்த பின்புதான், அது மனிதனாகவோ, மனுஷியாகவோ ஆக வேண்டும் என்கிற அவசியமில்லை. கருப்பையில் 20 வாரங்கள் அது வளர்ந்துவிட்டாலே, அதற்கு மனிதன் அல்லது மனுஷி என்று அழைக்கும் உயிர்த்தகுதி வந்துவிடுகிறது.

Image result for கருச்சிதைவு :

20 வாரங்களில் அது அம்மாவை விட்டுப் பிரிய வேண்டியது இருந்தாலும் அது உயிர் பிழைத்துக் கொள்ளும். ஆனால், அதற்கு முன்பு அது அம்மாவை விட்டுப் பிரிய நேரிட்டால், அது முழு உருவமாகவும் இருக்க முடியாது; உயிர் வாழவும் முடியாது. இதைத்தான் கருச்சிதைவு அல்லது அபார்ஷன் என்கிறோம்.

நோய்களை கவனிக்காமல் இருத்தல் :

Image result for கர்ப்ப காலத்தில் கடுமையான காய்ச்சல்,

கர்ப்ப காலத்தில் கடுமையான காய்ச்சல், மலேரியா மற்றும் வைரஸ் கிருமிகளால் ஏற்படும் அம்மைத் தொற்றுகள் அபார்ஷன் ஆவதைத் தூண்டுவதுண்டு. நீரிழிவு, குறை தைராய்டு, இதயநோய், சிறுநீரக நோய் என அம்மாவின் உடலில் நோய்கள் ஏதாவது இருந்து சரியாக கவனிக்கப்படாமல் இருந்தால் அபார்ஷன் ஆகலாம்.

கடுமையான மருந்துகளால் ஏற்படும் அபார்ஷன் :

Related image

புற்றுநோய்க்குத் தரப்படும் மருந்துகள் போன்ற கடுமையான மருந்துகளைச் சாப்பிடுபவர்களுக்கு அபார்ஷன் ஏற்படலாம். புகைபிடித்தல், புகையிலை போடுதல், மது அருந்துதல் போன்ற பழக்கங்கள் உள்ள பெண்களுக்கு அபார்ஷன் ஆகும் வாய்ப்புகள் அதிகம்.

அபார்ஷனின் வகைகள் :

தானாக ஆகும் அபார்ஷன், மருத்துவக் காரணங்களுக்கான அபார்ஷன், செப்டிக் அபார்ஷன் என அபார்ஷனில் மூன்று வகை உண்டு. தானாக ஆகும் அபார்ஷன் கீழ்க்காணும் விதங்களில் ஏற்படுகிறது.

அபார்ஷனுக்கான காரணங்கள் :

கருப்பையில் உருவான கருவில் குரோமோசோம்களில் குறைபாடு இருந்தால் கரு சரியாக உருவாகாது. இதனால், இயல்பாகவே கருப்பை அதை ஏற்றுக்கொள்ளாமல் அபார்ஷன் ஏற்பட்டுவிடும். அம்மாவுக்கு நோய் எதிர்ப்பு சக்தி சார்ந்த ‘ஆன்டிபாஸ்போலிப்பிட் ஆன்டிபாடி சிண்ட்ரோம்’, ‘திராம்போபிலியா’ போன்ற நோய்கள் இருந்தாலும் அபார்ஷன் ஆகிறது.

Image result for கருச்சிதைவு :

செப்டிக் அபார்ஷன் தானாக ஆகும் அபார்ஷன், மருத்துவக் காரணங்களுக்காக மேற்கொள்ளப்படும் அபார்ஷன் ஆகிய இரண்டிலும் சுகாதாரமற்ற முறையில் கருப்பையை சுத்தப்படுத்த முனையும்போது, இது ஏற்படுகிறது.

வேகத்தில் விவேகம் இழந்த பெண்கள் :

Related image

வேகத்தில் விவேகத்தை இழந்து கர்ப்பமாகும் திருமணமாகாத பெண்களும், வேண்டாத கர்ப்பத்தைச் சுமக்கும் பெண்களும் கருவைக் கலைப்பதற்காக சுகாதாரமற்ற, தகுதியில்லாத இடங்களைத் தேடிப்போய் கருவைக் கலைத்து உயிருக்கே ஆபத்தை வரவழைத்துக்கொள்வதும் நம் சமூகத்தில் நடக்கிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment