இந்தியாவில் அறிமுகமான பென்லிங்கின் “ஆரா” எலக்ட்ரிக் ஸ்கூட்டர்..!

  • இந்தியாவில் பென்லிங் நிறுவனம், தனது புதிய எலக்ட்ரிக் ஸ்குட்டரான ஆராவை அறிமுகம் செய்தது.
  • மேலும், இந்த நிறுவனத்தில் இதுவே முதல் அதிவேக ஸ்குட்டராகும்.

2019 இ.வி. எக்ஸ்போ விழாவில் பென்லிங் இந்தியா நிறுவனம், தனது புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான “ஆரா”வை அறிமுகம் செய்தது. இந்த ஆற, இன்நிறுவனத்தின் முதல் அதிவேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். இந்த ரெட்ரோ ஸ்டைலிங் கொண்ட ஸ்கூட்டரில், நிறைய அதிநவீன அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் ரிமோட் கீலெஸ் சிஸ்டம், யு.எஸ்.பி. சார்ஜிங் வசதி, ஆண்டி-தெஃப்ட் அலாரம், பின்புறம் ஒருங்கிணைக்கப்பட்ட லாக்கிங் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கிறது.

இத்துடன், ஸ்மார்ட் அசிஸ்டண்ஸ் சிஸ்டம் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த சிஸ்டம், வாகனம் நடுவழியில் ரிப்பேர் ஆனாலும், தொடர்ந்து இயங்க வழி வகுக்கும். புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 2500 BLDC எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் 72V/40Ah லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 120 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும். மேலும் இது மணிக்கு அதிகபட்சம் 60 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.