40 நாள்களில் மூன்று முறை ஆட்டநாயகன் விருது பெற்ற பென் ஸ்டோக்ஸ்..!

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று

By murugan | Published: Aug 27, 2019 08:45 AM

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 22-ம் தேதி மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்கி நேற்று முன்தினம் முடிந்தது. மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து  அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 359 ரன்கள் இலக்குடன் களமிறங்கியது ஆனால் இங்கிலாந்து அணி 286 ரன்களுக்கு 9 விக்கெட் இழந்தது. பரிதாபமான நிலையில் இங்கிலாந்து அணி இருந்தது.காரணம் முதல் இன்னிங்சில் 67 ரன்னிற்கு ஆல் அவுட் ஆனதால் இப்போட்டியில் இங்கிலாந்து வெற்றிபெற வாய்ப்பு குறைவு என பலர் கூறினர். அவர்களின் நினைப்பை பென் ஸ்டோக்ஸ் தகர்ந்து எறிந்தார். நிதானமாகவும் , அதிரடியாகவும் விளையாடிய பென் ஸ்டோக்ஸ் 135 ரன்கள் குவித்ததன் மூலம் இங்கிலாந்து திரில் வெற்றி பெற்றது.இந்நிலையில் இப்போட்டியில் பென் ஸ்டோக்ஸ் ஆட்டம் திருப்பு முனையாக அமைந்ததால் அவருக்கு ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டது. மேலும் கடந்த 40 நாள்களில் 3 முறை ஆட்டநாயகன் விருதை வாங்கி உள்ளார். உலகக்கோப்பையில்  இறுதி போட்டியிலும் , ஆஷஸ் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் ஆட்டநாயகன் விருது வாங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Step2: Place in ads Display sections

unicc