விராட்கோலியிடம் இருந்து அதனை கற்றுக்கொள்ளுங்கள் - மேற்கு இந்திய தீவுகள் அணியின் உதவி பயிற்சியாளர் அறிவுரை

மேற்கு இந்திய தீவுகள் அணி மற்றும் இந்திய அணி இடையே முதல் ஒருநாள் போட்டி

By venu | Published: Dec 15, 2019 01:04 PM

  • மேற்கு இந்திய தீவுகள் அணி மற்றும் இந்திய அணி இடையே முதல் ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. 
  • கோலியிடம்  இருந்து நிறைய வீரர்கள் உழைப்பு கற்றுக்கொள்ள வேண்டும் என்று மேற்கு இந்திய தீவுகள் அணியின் உதவி பயிற்சியாளர் ரோட்டி எஸ்ட்விக் தெரிவித்துள்ளார். 
மேற்கு இந்திய தீவுகள் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.இந்த சுற்றுப்பயணத்தில் இரு அணிகளுக்கும் இடையே  3 டி-20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.அதன்படி முதலில் டி -20 தொடர் நடைபெற்றது.முதலில் நடைபெற்ற டி -20 போட்டியில் இந்திய அணியும் ,இரண்டாவது டி -20 போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணியும் ,கடைசி டி -20 போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது.இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையே ஒருநாள் தொடர் நடைபெறுகிறது.இன்று முதல் ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மேற்கு இந்திய தீவுகள் அணியின் உதவி பயிற்சியாளர் ரோட்டி எஸ்ட்விக் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கடினமான உழைப்பின் மூலம் தான் உயர்வான நிலையை எட்டியுள்ளார். கோலியிடம்  இருந்து நிறைய வீரர்கள் உழைப்பு கற்றுக்கொள்ள வேண்டும். உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தாலும், கடினமாக உழைக்கவில்லை என்றால் சாதிக்கவே முடியாது என்று தெரிவித்துள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc