இளம் வயதில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படும் இந்திய, பாகிஸ்தான் பெண்கள்- ஆய்வில் தகவல்..!

மார்பக புற்றுநோய் என்பது உலகளவில் பெண்களுக்கு பொதுவான புற்றுநோயாகும். இருப்பினும், கிட்டத்தட்ட 60% இறப்புகள் மிகவும் வளர்ந்த சர்வதேச இடங்களில் நிகழ்கின்றன. மார்பக புற்றுநோய் என்பது இந்தியப் பெண்களிடையே அதிகம் காணப்படும் புற்றுநோயாகும்.

இது பெண்களில் ஏற்படும் புற்றுநோய்களில் 14% ஆகும். இந்தியாவில் ஒவ்வொரு 4 நிமிடங்களுக்கும் ஒரு பெண் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுவார் என்றும் ஒவ்வொரு 13 நிமிடங்களுக்கும் ஒரு பெண் இறந்துவிடுவார் என்றும் கூறப்படுகிறது.

ஐம்பது வயதை எட்டிய பெண்களில் மார்பக புற்றுநோய் அதிகமாக இருந்தாலும், அது எந்த வயதிலும் தாக்கக்கூடும் என்பது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்திய மற்றும் பாகிஸ்தான் பெண்கள் பொதுவாக இளம் வயதிலேயே மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள் என கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் வாழும் இந்திய, பாகிஸ்தான் பெண்கள் மற்றும்  ஹிஸ்பானிக் அல்லாத கருப்பு பெண்களிடம் ஆய்வு செய்தனர். அதில், அமெரிக்காவில் வாழும் இந்திய, பாகிஸ்தான் பெண்கள் இளம் வயதிலேயே மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஆய்வு தெரிவிக்கிறது.

புற்றுநோயின் சர்வதேச இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில் நியூ ஜெர்சியின் ரட்ஜர்ஸ் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் மற்றும் ரட்ஜர்ஸ் புற்றுநோய் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்களால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வில், இந்திய மற்றும் பாகிஸ்தான் பெண்களை விட ஹிஸ்பானிக் அல்லாத கருப்பு பெண்களில் மார்பக புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். காலப்போக்கில் அதிகமான இந்திய மற்றும் பாகிஸ்தான் பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்திய மற்றும் பாகிஸ்தான் பெண்கள் இளம் வயதிலேயே மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுவதற்கான கூடுதல் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது.

இந்திய மற்றும் பாகிஸ்தான் பெண்கள் ஹிஸ்பானிக் அல்லாத கருப்பு பெண்களை விட மார்பக புற்றுநோயால் இறப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என ஆய்வில் தெரியவந்துள்ளது.

author avatar
murugan