21 வயதுக்கு உட்பட்டோர் செல்போன் பயன்படுத்தினால் ஓராண்டு சிறை?! – புதிய மசோதா தாக்கல்!

  • அமெரிக்காவில் உள்ள செனட் சபையில் 21 வயதுக்கு உட்பட்டவர்கள் செல்போன் பயன்படுத்துவது சட்ட விரோதம் என அறிவிக்க கோரி மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
  • இந்த மசோதா நிறைவேற வாய்ப்பே இல்லை என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். 

அமெரிக்காவில் உள்ள செனட் சபையில் ஜனநாயக கட்சியை சேர்ந்த வேர்மொன்ட் மாகாண உறுப்பினர் ஜான் ரோட்ஜர்ஸ் என்பவர் மசோதா தாக்கல் செய்தார். அந்த மசோதாவில் 21 வயதுக்கு உட்பட்டோர்கள் செல்போன் உபயோகபடுத்த தடைவிதிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

அந்த மசோதாவில், 21வயதிற்கு உட்பட்டவர்களுக்கு செல்போனை எப்படி, எதனை பயன்படுத்த வேண்டும் என்ற முதிர்ச்சி இல்லை. அதனால் அந்த குறிப்பிட்ட வயதினர் செல்போன் உபயோகப்படுத்த தடை கூற வேண்டும். அதனை மீறினால், அவர்களுக்கு 1 வருட சிறை தண்டனை விதித்து, 72 ஆயிரம் அபராதம் விதிக்க வேண்டும் எனவும் அந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டதும், இந்த மசோதா கண்டிப்பாக நிறைவேறாது என பலரும் தெரிவித்து வருகின்றனர். அது அவருக்கே தெரியும் தான். இந்த மசோதாவை ஒரு விழிப்புணர்வுக்காக தான் தாக்கல் செய்தேன் என அவரே தெரிவித்துள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.