டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியலை வெளியிட்ட பிசிசிஐ.!

  • நாளை இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையேயான ஒரு நாள் தொடர் செடன் பார்க், ஹாமில்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
  • இந்நிலையில், டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி வீரர்களை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

இந்திய அணி நியூசிலாந்து பயணம் மேற்கொண்டு 5 டி20, 3 ஒரு நாள் தொடர் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் மோதுகின்றன. முதல்கட்டமாக இந்தியா-நியூசிலாந்துக்கு இடையேயான 5 டி20 போட்டிகள் முடிவடைந்தன. அதில் இந்திய அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி 5:0 என்ற கணக்கில் நியூசிலாந்தின் சொந்த மண்ணில் ஒயிட் வாஷ் செய்து தொடரை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து நாளை இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையேயான ஒரு நாள் தொடர் செடன் பார்க், ஹாமில்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இடத்தொடரில் 3 ஒரு நாள் போட்டிகளை இந்தியா விளையாடவுள்ளது. பின்னர் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்நிலையில், டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி வீரர்களை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் ஒரு நாள் தொடர் அணி: லோகேஷ் ராகுல் (wk), விராட் கோஹ்லி (கேப்டன்), மாயங்க் அகர்வால், ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, நவ்தீப் சைனி, முகமது ஷமி, யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரீத் பும்ரா, பிருத்வி ஷாத் ஜாதவ், ஷார்துல் தாக்கூர்.

இந்தியாவின் டெஸ்ட் அணி: விராட் (கேப்டன்), மாயங்க், பிருத்வி ஷா, சுப்மான், புஜாரா, அஜிங்க்யா ரஹானே (vc), ஹனுமா விஹாரி, விருத்திமான் சஹா (wk), ரிஷாப் பந்த் (wk), ஆர்.அஸ்வின், ஆர்.ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா, உமேஷ் யாதவ், மொஹமட். ஷமி, நவ்தீப் சைனி, இஷாந்த் சர்மா (உடற்பயிற்சி அனுமதிக்கு உட்பட்டது).

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்