ஐ.பி.எல் பரிசுத்தொகையை பாதியாக குறைத்த பிசிசிஐ.! எத்தனை கோடினு தெரியுமா.?

ஐ.பி.எல் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு பரிசுத்தொகையாக ரூ.20 கோடியும், 2வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.12.5 கோடி வழங்கப்பட்டது. மேலும் 3வது மற்றும் 4வது இடத்தைப் பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.8.75 கோடியும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான பரிசுத்தொகையை பிசிசிஐ பாதியாக குறைத்துள்ளது. அதாவது சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.10 கோடியும், 2வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.6.25 கோடியும் வழங்கப்பட உள்ளது. மேலும் 3வது மற்றும் 4வது இடங்களை பிடிக்கும் அணிக்கு ரூ.4.375 கோடி வழங்கப்படும். இதையடுத்து ஐ.பி.எல் போட்டிகளை நடத்தும் ஒவ்வொரு மாநில சங்கங்களுக்கும் தலா ஒரு கோடி ரூபாயும் வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்